சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - சிவா பிரமாண்ட கூட்டணியில் "அண்ணாத்த "

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  - சன் பிக்சர்ஸ் - சிவா பிரமாண்ட கூட்டணியில்  "அண்ணாத்த "

எந்திரன் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் "அண்ணாத்த " திரைப்படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார் .இப்படத்தை சிவா இயக்குகிறார் .சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சிவா கூட்டணி முதன் முதலாக இப்படத்திற்க்காக இணைந்துள்ளது . இந்த படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது 

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர்  டி.இமான் இசையமைக்கிறார் .

மேலும் இப்படத்தில் மீனா , குஷ்பு ,நயன்தாரா , பிரகாஷ் ராஜ் ,கீர்த்தி சுரேஷ் ,சூரி, சதிஷ் , ஆகியோர்  நடிக்கின்றனர்.இன்று இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் -சிவா
தயாரிப்பு - சன் பிக்சர்ஸ் (கலாநிதி மாறன் )
ஒளிப்பதிவு -வெற்றி பழனிசாமி
படத்தொகுப்பு - ரூபன்
கலை இயக்கம் -மிலன்
சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயண்
நடனம் - பிருந்தா , பிரேம் ரக்ஷித் ,
பாடல்கள் - விவேகா , மணி அமுதவன்
ஆடை வடிவமைப்பு - அணு வர்தன், தட்ஸா பிள்ளை , ஷ்ரவ்யா வர்மா , அணு பார்த்தசாரதி , சங்கீதா
நிர்வாக தயாரிப்பு - R .ரமேஷ் குச்சிராயர் , S .சுரேஷ் மணியன் ,தாண்டவ கிருஷ்ணன் , R அன்பழகன்
ஸ்டில்ஸ் - சிற்றரசு
துணை எழுத்தாளர் - ஆதி நாராயணா
துணை இயக்கம் - R ராஜசேகர்
சவுண்ட் டிசைன் - உதயகுமார்
விளம்பர வடிவமைப்பு - கபிலன்
VFX - ஹரிஹர சுதன்
மேக்கப் - குப்புசாமி
உடைகள் - ராஜன்
வசனம் - சிவா ,சந்திரன் , சாவித்ரி முத்து , பாக்யராஜ்
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்