வேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் "7ம் உயிர்"

வேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் "7ம் உயிர்"

வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் நெடுந்தொடர் "7ம் உயிர்".

அண்ட சராசரங்களை அடக்கி ஆளும் சக்தி தனக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கும் தீயவன் வீரபத்திரன் ஒரே நட்சத்திரத்தில் ஒரே நாளில் பிறந்து வெவ்வேறு இடங்களில் வாழும் ஏழு கன்னி பெண்களை அமாவசையன்று பலி கொடுத்தால் அந்த சக்தியை பெறலாம் என நினைக்கிறான் . அவன் முயற்சி வெற்றி பெற்றதா ?என்பது கதை .இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில்  ஜீவா ரவி ,லட்சுமி மற்றும் சூசன் ஆகியோர் நடிக்கின்றனர்

சின்னத்திரை நேயர்களுக்கு புதிய விருந்து படைக்கவிருக்கும் இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .