அமிதாப் வேடத்தில் அஜித்

அமிதாப் வேடத்தில் அஜித்

இங்கிலீஷ் விங்கிலீஸ் தமிழ் பதிப்பின் போது ஸ்ரீதேவி, தனக்கு ஒரு படத்தில் நடித்து தரவேண்டும் என்று கோரியிருக்கிறார், அதனால் படம் முடிந்ததும் அடுத்த படத்திற்கு ஸ்ரீதேவி படத்தில் நடிக்க முடிவெடுத்தார். அதற்குள் ஸ்ரீதேவி இறந்து விட்டதனால் அவர் கணவர் போனி கபூர் அஜித்திடம் நடித்து தர முயற்சி செய்தார். அதனால் அமிதாப்பச்சன் நடத்த "பிங்க்" படத்தின் கதையின் உரிமையும் பெற்றார். 

"பிங்க்" படத்தில் அமிதாப் நடித்த வேடத்தில் அஜித் நடிப்பார் என்றும் தகவல்கள் வந்தன. இந்த படத்தை வினோத் இயங்குவார் என்றும் செய்திகள் வந்தது, ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வமாக செய்திகள் வரவில்லை ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் "பிங்க்" தயாரிப்பாளர், "பிங்க்" படத்தின் தமிழ் பதிப்பில் அஜித் நடிப்பது உண்மை தான், இது பற்றி படக்குழுவினர் என்னிடம் நேரில் பேசினர், படத்தை ரீமேக் செய்த பிறகு எனக்கு திரையிட்டு காட்டுவதாக அவர்கள் கூறினர், மேலும் அப்படத்தில் தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யவிருப்பதாக தெரிவித்தனர் என்றார்.