2018- 20ம் சினிமா பி.ஆர்.ஓ சங்க நிர்வாகிகள் தேர்வு

2018- 20ம் சினிமா பி.ஆர்.ஓ சங்க நிர்வாகிகள் தேர்வு
Cinema PRO Election 2018-20 News

சென்னை: தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2018-20க்கான நடந்த தேர்தலில் புதிய தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2018-20ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். கிரிதரன், மேற்பார்வையில் நேற்று நடந்தது.

தலைவராக விஜயமுரளி', பொதுச்செயலாளராக பெருதுளசி பழனிவேல், பொருளாளராக யுவராஜ், துணைத் தலைவர்களாக கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச்'செயலாளர்கள் குமரேசன், ஆனந்த், செயற்குழு உறுப்பினர்களாக வி.பி மணி, கிளாமர் சத்யா, மதுரை செல்வம், நிகில் முருகன், சரவணன், சாவித்திரி, ஆறுமுகம், சங்கர், செல்வகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.

Cinema PRO Election 2018-20 News