தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது கமிஷனர் ஆபிசில் புகார்
அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் "நோட்டா", இத்திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
இந்நிலையில், ஞானவேல்ராஜா மீது தெலுங்கு பட வசனகர்த்தா ஷசாங் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார், அதில், "இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு நான் வசனம் எழுதினேன். எனக்கு சம்பளம் பேசப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் போஸ்டரில் எனது பெயருக்கு பதில் வேறொருவர் பெயர் இடம்பெற்றுள்ளது. எனக்கு பேசிய சம்பளமான ரூ.15 லட்சத்தையும் அவர் தரவில்லை. அவரிடம் அதை பெற்று தரவேண்டும்" என்று கூறியுள்ளார்.