தமிழக ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் பாலமுரளி பாலு கடிதம்

தமிழக ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் பாலமுரளி பாலு கடிதம்
Music Director Balamurali Balu Thanks Letter to Tamil audience

அன்புள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,

வணக்கம்.

நான் "பிச்சாங்கை" படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நாள் முதல் இன்று வரை, எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இதுவரை பீச்சாங்கை, ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்கள் எனது இசையில் வெளியாகியுள்ளது.

நாளை (22ம் தேதி, ஜூன் மாதம்) கீரின் சிக்னல் தயாரிப்பில், விக்கி இயக்கத்தில், பிரபல இயக்குனர் S.A.சந்திரசேகர் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் "டிராபிக் ராமசாமி" படத்திற்கு இசையமைத்துள்ளேன்.

"டிராபிக் ராமசாமி" படத்திற்கு இசையமைத்துள்ளதை மிகவும் பெருமைக்குறிய விஷயமாக கருதும் அதே வேளையில் எனது மனமார்ந்த நன்றியை "டிராபிக் ராமசாமி" படக்குழுவினருக்கு தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆர்யா நடிக்கும் "கஜினிகாந்த்" மற்றும் "பல்லு படாம பாத்துக்க", மீடியா மார்ஷல் தயாரிப்பில் அருள். S இயக்கத்தில் உருவாகும் "தட்றோம் தூக்குறோம்" ஆகிய படங்களுக்கு நான் இசையமைத்துள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இத்தருணத்தில் எனது இசை பயணத்திற்கு முழுபலமாய் விளங்கும் பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் ஆதரவை என்றும் நாடும், - பாலமுரளி பாலு.

Music Director Balamurali Balu Thanks Letter to Tamil audience