4 குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை உறுதி: உச்சநீதிமன்றம்

4 குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை உறுதி: உச்சநீதிமன்றம்
Nirbhaya Gangrape Case SC upholds death sentence

புது டெல்லி: டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி, 23 வயதான ஜோதி சிங் (நிர்பயா) என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த ஜோதி சிங், மேல் சிகிச்சைக்காக சிங்கபூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் இளங்குற்றவாளி என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார், இளங்குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் இளம்குற்றவாளி தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டான்.

இந்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு 4 குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

Nirbhaya Gangrape Case SC upholds death sentence