‘காலா’ படத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர

‘காலா’ படத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர
Severe action will be taken against Rajinikanth Kaala

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 9-ஆம் தேதி) மாலை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த பாடல்கள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்பாடல்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, ‘காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது. திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது. ‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்’ என்றார்.

Severe action will be taken against Rajinikanth Kaala