"சண்டக்கோழி - 2" திரைப்பட விமர்சனம்

"சண்டக்கோழி - 2" திரைப்பட விமர்சனம்

7 ஆண்டுகளாக தடைபட்ட கோவில் திருவிழாவை எப்படியாவது இந்த ஆண்டு நடத்தியாக வேண்டும் என்று முடிவெடுக்கிறார் ராஜ்கிரண்.

திருவிழாவை நடத்தவிடாமல் பார்த்துக்கொண்டு, தன் கணவரை தீர்த்துக்கட்டிய குடும்பத்தின் வாரிசை திருவிழாவில் தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார் வரலட்சுமி, வாரிசோ ராஜ்கிரணின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்.

ஊரில் இல்லாத நாயகன் விஷால் கோவில் திருவிழாவுக்காக வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்புகிறார், அதே ஊரில் போலிசாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் கீர்த்தி சுரேஷ், இந்நிலையில் தான் விஷாலுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் காதல்.

பகை முடிந்து நல்லபடியாக திருவிழா முடிந்ததா? வரலட்சுமி தன்னுடைய பகையை தீர்த்துக்கொண்டாரா? விஷால், கீர்த்தி சுரேஷின் காதல் நிறைவேறியதா? என்பதே "சண்டைக்கோழி 2" திரைப்படத்தின் கதை.

விஷால் தனது வழக்கமான நடிப்புடன், ஆக்ஷன் காட்சிகளிலும் தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார், அது மட்டுமல்லாமல் கதையும், கதாபத்திரமும் பொருத்தமாய் அமைந்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஏற்றிருக்கும் கதாபத்திரத்திற்கேற்ப நடித்திருக்கிறார், விஷால், கீர்த்தி சுரேஷ் காதல் காட்சிகளும் பிரமாதம்.

ராஜ்கிரண், விஷாலின் அப்பாவாக நடித்ததுடன் அவரின் கதாபாத்திரமே படத்திற்கு பலம்.

வரலட்சுமிக்கு அழுத்தமான கதாபாத்திரம், வில்லியாக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார், கதாநாயகியாகத் தான்  நடிக்க வேண்டும்  என்றில்லாமல் வில்லியாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

காமெடிக்கு கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த் துணை நிற்கிறார்கள்.

அர்ஜய், மாரிமுத்து, பிறைசூடன், கு.ஞானசம்பந்தம், சண்முகராஜன், தென்னவன் துரைசாமி, விஸ்வநாத் ஆகிய நடிகர்கள் கதாபாத்திரத்திற்கேற்ப  நடித்திருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அருமையாக அமைந்திருக்கிறது, கே.ஏ சக்திவேல்  ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது.

இயக்குனர் லிங்குசாமி, சண்டைக்கோழி 2 பாகத்திலும் குடும்ப பகை, ஊர் பகை, உறவு பகை, காதல்', காமெடி, ஆக்ஷன் என கலந்து கொடுத்தது பாராட்டு பெறுகிறார்.