திறன்மேம்பாட்டு பயிற்சி

திறன்மேம்பாட்டு பயிற்சி
Toyota Technical Education Program launched in Chennai

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற திறன்மேம்பாட்டு பயிற்சி

பயிற்சி திட்டத்திற்காக தொழிற்பயிற்சி நிலையங்களுடன் டோயோட்டா கூட்டு

சென்னை, ஜூலை 4: டோயோட்டா கிர்லோஷ்கர் மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னையில் உள்ள டான்பாஸ்கோ தொழிற்பயிற்சி வளாகத்தில் தனித்துவமான பயிற்சி மாதிரியை (டிடிஇபி) அறிமுகப்படுத்தியது. ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகளுக்கு தொழில் திறனுடைய பணியாட்களை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்தபயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள திறமைகளை வெளிக்கொணர பயிற்சி நிறுவனங்களுடன் டோயோட்டா நிறுவனத்தின் 4வது கூட்டு முயற்சி இதுவாகும். முதலாவது டிடிஇபி திட்டம் சென்னையில் உள்ள எம்.சி.ஜெயின் தொழிற் பயிற்சி நிலையத்தில் பொது தொழில்நுட்ப பிரிவு என்ற அடிப்படையில் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.

ஆட்டோ மொபைல் தொழில் மிகவும்வேகமாக வளர்ந்து வருவதால் தொழில் திறன்மிக்க இளைஞர்கள் தேவையும் அதிகரித்து வருகிறது. தற்போது தொழிற்சாலைகளுக்கும் தொழில்திறனுக்கும் மிகப்பெரியஇடைவெளி ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள டோயோட்டா நிறுவனம் தொடர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஐடிஐ பயிற்சி மையங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலமாக இளம் தலைமுறையினர் சிறப்பான பயிற்சியைபெற முடிகிறது.

இந்த நிகழ்சியை சென்னையில் உள்ள டான்பாஸ்கோ தொழில்பயிற்சி வளாக நிர்வாகியும் ரெக்டருமான அருட்தந்தை ஜான்சன் ஆரோக்கியசாமி, பயிற்சி நிலைய இயக்குநர் அருட்தந்தை அசோக் அமலாதாஸ், லான்சன் டோயோட்டா முதன்மையான டீலர் எம்.லங்காலிங்கம், சென்னையில் உள்ள ஹர்ஷ் டோயேட்டா வாடிக்கையாளர் சேவைப்பிரிவு துணைத்தலைவர் செந்தில்குமார் டோயோட்டா கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சேவைப்பிரிவு துணைத்தலைவர் பி.பத்மநாபா, டோயோட்டா கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனத்தின் பெங்களூரு பிரிவின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவு பொதுமேலாளர் ரவி பி சன்டேக்கி ஆகியோர் வாழத்திப்பேசினர்.

தொழிற்பயிற்சி நிலையங்களுடன் டோயோட்டா நிறுவனம் கூட்டு சேர்ந்துகொண்டு டிடிஇபி என்ற இந்தபுதிய பயிற்சியை வழங்குகிறது. இது 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இங்கு பயிற்சி பெற்றவர்கள் நாடு முழுவதிலும் உள்ள டோயோட்டா பழுதுபார்க்கும் நிலையங்களில் பணியாற்றி வருகிறார்கள். முதல் ஆண்டு திட்டம் டில்லி, மும்பை, சென்னை, ஹூப்ளி ஆகிய இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பெங்களூரு, புனே, கொச்சி, ஐதராபாத், பரமக்குடி, மங்களூரு, லூதியானா, கட்டாக், சாலகுடி, காசியாபாத்,ஜெய்பூர், ஜலந்தர் உள்ளிட்ட தேசம் முழுவதும் இந்த பயிற்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் 6750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி முடித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது நடைபெறவுள்ளது 4வது முறையாகும்.

Toyota Technical Education Program launched in Chennai